திருச்சி மாவட்டத்தில் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டம் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.திருச்சி மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக பழைய மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் அயலக அணி மாநில துணைத் தலைவர் என்.கே.அமீருதீன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் எம்.கே.எஸ்.ஜமால், மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.ஜாபர் ஷெரீப், இளைஞர் அணி மண்டலச் செயலாளர் எம். சாதிகுல் அமீன், அயலக அணி மாவட்டப் பொருளாளர் ஏ.அப்துல் முத்தலீப், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜி.எச்.சையத் ஹக்கீம், முன்னாள் எஸ்.டி.யூ. மாநில துணைத் தலைவர் எஸ்.ஷேக் முஹம்மது கௌஸ், திருச்சி தெற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் எஸ்.சர்புதீன் சாயபு (எ) காஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் திருச்சி மாவட்ட மற்றும் வார்டு, பகுதி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






0 Comments