தேசிய அளவில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கான கராத்தே போட்டியில் திருச்சி திருவெறும்பூர் பள்ளி மாணவி வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.மத்திய பிரதேசம் மாநிலம், ஷாஜாப்பூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் நடைபெற்ற தேசிய சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே போட்டி கடந்த 16,17,18,19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில் நாடு முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் கலந்து கொண்டன.இதில் பிரகாஷ் நகரில் இயங்கி வரும் தமிழ் வாரியர் கராத்தே அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவி பி.லஷனா .இவர் திருவெறும்பூர் அருகே காட்டூர் மான்போர்ட் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் 14 வயதிற்குட்பட்டவருக்கான 56 கிலோ எடை பிரிவில் பங்கு பெற்று வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் .
இதை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் , வகுப்பு ஆசிரியர், ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழ் வாரியர் கராத்தே அகாடமியின் தலைமை பயிற்சியாளர் கராத்தே ஆர்.சுதாகர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்

0 Comments