// NEWS UPDATE *** ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இன்று முதல் விலையில்லா வேட்டி - சேலை விநியோகம். முதியோர் ஓய்வூதியதார‌ர்கள் வரும் 7ம் தேதி வரை குடும்ப அட்டையுடன் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் - கூட்டுறவுத் துறை அறிவிப்பு *** திருச்சியில் மஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் .!மாநிலத் துணைச் செயலாளர் திருச்சி ஷரிப் பங்கேற்பு .!!

திருச்சியில் மஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் .!மாநிலத் துணைச் செயலாளர் திருச்சி ஷரிப் பங்கேற்பு .!!

மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் ராஜா முஹமது தலைமையில், மாவட்டத் துணைச் செயலாளர் யாசர் ஷெரிப் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநிலத் துணைச் செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான திருச்சி ஷரிப் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :-


1️⃣ யாசர் ஷெரிப் மாநகரச் செயலாளராகவும், சிராஜூதீன் அவர்கள் மாநகரப் பொருளாளராக நியமிக்கப் படுகிறார்கள்.

2️⃣ திருவரம்பூர் பகுதி செயலாளராக செயல்பட்டு வந்த அண்ணா வளைவு யஹ்யா  மாவட்ட துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். 



3️⃣ நவம்பர் 19 அன்று கேர் கல்லூரியில் நடைபெறவுள்ள முன்னாள் அமைச்சர் மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் K.N.நேரு இல்ல திருமண விழாவில் மஜக தலைவர் அவர்களோடு  உற்சாகமாய் கலந்து கொள்வது. 

4️⃣ மாநகரின் முக்கிய மூன்று பகுதிகளில் பொதுமக்கள் பயன் பெறும் வண்ணம் மருத்துவ முகாம் நடத்துவது.




5️⃣ தீபாவளி பண்டிகை வியாபாரத்தின் போது சிறு, குறு தரைக்கடை வணிகர்களை அலைக்கழிப்புச் செய்த திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரிகளை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

6️⃣ பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்க மனுக்களை முன்னிறுத்தி காவல் துறை ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட வருவாய் துறை நிர்வாக அதிகாரிகளை சந்திப்பது.

இறுதியாக மாவட்ட துணைச் செயலாளர் ஹபீப் நன்றியுரை கூற நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.




Post a Comment

0 Comments