// NEWS UPDATE *** ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இன்று முதல் விலையில்லா வேட்டி - சேலை விநியோகம். முதியோர் ஓய்வூதியதார‌ர்கள் வரும் 7ம் தேதி வரை குடும்ப அட்டையுடன் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் - கூட்டுறவுத் துறை அறிவிப்பு *** விபத்தில் சிக்கிய மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மரணம் நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

விபத்தில் சிக்கிய மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மரணம் நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

குளித்தலை மணப்பாறை பிரதான சாலை சின்ன ரெட்டியப்பட்டி ஜக்கம்மா கோவில் அருகில் மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தெற்கு இருந்து வடக்கு நோக்கி சாலை மீது மோதியதில் அந்த பெண்ணுக்கு பின் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உயிர்காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம்   மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பெண் மரணமடைந்தார். மேற்படி நபர் உடல்,உடற்கூராய்வு செய்யப்பட்டது. 

உடற்கூராய்வு செய்யப்பட்ட உடலினை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் நல்லடக்கம் செய்வதற்காக ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தோகமலை காவல் நிலைய தலைமை காவலர் காளிதாஸ் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற பிரேதத்தை தோகைமலை காவல் நிலைய தலைமை காவலர் காளிதாஸ் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.

Post a Comment

0 Comments