// NEWS UPDATE *** ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இன்று முதல் விலையில்லா வேட்டி - சேலை விநியோகம். முதியோர் ஓய்வூதியதார‌ர்கள் வரும் 7ம் தேதி வரை குடும்ப அட்டையுடன் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் - கூட்டுறவுத் துறை அறிவிப்பு *** திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற NEXUS CHAMPIONSHIP 2026 – 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற NEXUS CHAMPIONSHIP 2026 – 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

னதிருச்சி மாவட்ட பிசிக் அலையன்ஸ் (Trichy District Physique Alliance) சார்பில் NEXUS CHAMPIONSHIP 2026 – Regional Level Bodybuilding & Physique Championship திருச்சி மொராய்ஸ் கிளாரியன் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியில் திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆணழகன் மற்றும் உடலமைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தங்களது உடல் கட்டுக்கோப்பு, திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை மேடையில் வெளிப்படுத்தினர்.


பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள், விளையாட்டுத் துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்கள், நடுவர்கள், உடற்பயிற்சி மைய உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


நிர்வாகக் குழு:

பாலாஜி – NPC Head

 நிருபன் – Manager

டேனியல் வின்ஸ்டன் – Treasurer

இளைஞர்களிடையே உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வளர்ந்து வரும் ஆணழகன் வீரர்களுக்கு சிறந்த போட்டி மேடையை உருவாக்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இப்போட்டி வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து வீரர்கள், சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு திருச்சி மாவட்ட பிசிக் அலையன்ஸ் நிர்வாகக் குழு சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.


Post a Comment

0 Comments