பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக, லட்சிய ஜனநாயக கட்சியின் திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரண்டு வந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் A. சசிகுமார், மாவட்டப் பொருளாளர் A. ராஜ்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் S.K. ஆனந்த், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் R.S. பூபதி, பகுதி துணைச் செயலாளர்கள் K. துரைசிங்கம், A. தங்கராஜ், பகுதி அவைத் தலைவர் P. கிருஷ்ணமூர்த்தி, D. தேவகி, ஸ்ரீரங்கம் வட்டச் செயலாளர் 1 வது வார்டு,செந்தில் , 5 வது வார்டு முத்து, 6 வது வார்டு குமரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கம் ஒன்றியச் செயலாளர்கள் மோகன்ராஜ், அருண், மணிகண்டன் மற்றும் மணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளர் நூறு பாஷா, ரஹமத், அரவிந்த் சுந்தர் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அதேபோல், மணச்சநல்லூர் கிளைச் செயலாளர்கள் தினேஷ், ஹரிகரன், வெங்கடேஷ், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த கார்த்தி, மணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் இளமுருகன், பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில், லட்சிய ஜனநாயக கட்சியின் திருச்சி வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் மற்றும் மணச்சநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


0 Comments