// NEWS UPDATE *** செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரை பிடித்து சிபிசிஐடி விசாரணை ************ தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு காரணங்களால் 14 பேர் உயிரிழந்துள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி *** தனியார் கல்லூரியின் பவள விழா: பெண்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் புதிய மைல்கல் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்..

தனியார் கல்லூரியின் பவள விழா: பெண்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் புதிய மைல்கல் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்..

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் 75 ஆவது ஆண்டு பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இதில் பத்மபூஷண் ஸ்ரீ என். ராமசுவாமி ஐயர் கல்வி வளாகத்தின் கல்வி இயக்குநர் டாக்டர்.கண்ணன் பஞ்சபகேசன் வரவேற்புரையாற்றினார். பத்மபூஷண் ஸ்ரீ என். ராமசுவாமி ஐயர் கல்வி வளாகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி .மாதவி கண்ணன், முதன்மை விருந்தினரை சிறப்பித்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிளாட்டினம் ஜூபிலி மலரை வெளியிட்ட பிறகு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மாணவிகள் மத்தியில் உரையாற்றியது... 

நாட்டில் பெண்களின் கல்வி வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் என்பது கடந்த சில தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது என்று  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.  

வரலாற்றுப் பயணமும் வளர்ச்சியும்:

1951 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் பெண்களுக்கான கல்வி நிறுவனங்கள் வியக்கத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. தொடக்கத்தில் வெறும் 11 மாணவிகளுடன் ஒரு சிறிய ஓட்டுப் கட்டிடத்தில் தொடங்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம், இன்று சுமார் 4,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயிலும் பெரிய வளாகமாக உருவெடுத்துள்ளது. மகாஷி கார்வே அவர்களின் உத்வேகத்தால், பெண்களின் கல்விக்காகத் தனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு வாழ்வைத் அர்ப்பணித்த பத்மபூஷன் ஸ்ரீ ராமசுவாமி அய்யர், கிராமம் கிராமமாகச் சென்று பெற்றோரிடம் விளக்கி மாணவிகளைத் தாமே பள்ளிக்கு அழைத்து வந்தார். 1951-ம் ஆண்டில் இந்தியாவில் 10 பெண்களில் ஒருவரே கல்வி கற்கும் சூழல் இருந்த நிலையில், இன்று நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. 


அகில இந்திய உயர்கல்வி சர்வே அறிக்கையின்படி, கடந்த 7 ஆண்டுகளாக ஆண்களைக் காட்டிலும் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை விகிதம் (GER) தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.   நாக் அங்கீகாரம் மற்றும் தொழிற்கல்வி, நாட்டின் முதல் ஏழு நாக் (NAAC) அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் இக்கல்லூரியில், மாணவிகளுக்குத் தோட்டக்கலை, உணவு பதப்படுத்துதல், ஆடை தயாரிப்பு, மின்னணுவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு போன்ற தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும், பவள விழா ஆண்டில் உலக அமைதிக்காக 3,200 பங்கேற்பாளர்கள் இணைந்து 75 திருக்குறள்களை யூனிசனில் பாடி உலக சாதனை படைத்துள்ளனர்.


தேசிய திட்டங்களும் பெண்களின் முன்னேற்றமும்:

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெண்களை வேலை உருவாக்குபவர்களாகவும், வளர்ச்சியின் தலைவர்களாகவும் தேசியக் கொள்கையின் மையத்தில் வைத்துள்ளார். முத்ரா திட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு கடன்கள் பெண்களுக்கு வழங்கப்படுவதோடு, கிராமப்புற பெண்களை லட்சாதிபதியாக்கும் 'லட்சாதிபதி திதி' (Lakhpati Didi) திட்டத்தின் தேசிய இலக்கு 6 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அறிவியலில் பெண்களை ஊக்குவிக்க 'WISE-KIRAN', 'CURIE' மற்றும் 15 லட்சம் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் 'மால்தீயா மிஷன்' போன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.




திருச்சி பகுதியின் பங்கு மற்றும் ஐடிஐ மேம்பாடு:

திருச்சி பகுதி தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தின் முக்கிய முனையாகத் திகழ்வதோடு, ஆர்டிசென் தொழிற்சாலை மற்றும் கோல்டன் ராக் ரயில்வே பணிமனைகளைக் கொண்டுள்ளது. அருகில் உள்ள திருவெறும்பூர் அரசு ஐடிஐ மற்றும் புல்லம்பாடி மகளிர் ஐடிஐ போன்றவற்றுடன் இணைந்து SRC கல்லூரி ஒரு நங்கூர நிறுவனமாகச் செயல்பட வேண்டும். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 60,000 கோடி ரூபாய் நிதியுதவியுடன், நாடு முழுவதும் உள்ள 1,000 அரசு ஐடிஐ-களை மேம்படுத்தி நவீன தொழில்நுட்பங்களுடன் ஸ்கில்லிங் பயிற்சி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரிசாவில் உள்ள ஆர்பிஐ டேட்டா சென்டர் மற்றும் சிங்கப்பூர் உதவி மூலம் மாணவர்கள் பயிற்சி பெற்றது போன்ற சர்வதேச தரத்திலான பயிற்சிகளை SRC கல்லூரி வழங்க முன்வர வேண்டும்.


நிதி எழுத்தறிவு மற்றும் எதிர்கால லட்சியம்:

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் பெண்களுக்கு பினான்சியல் லிட்டரசி மிகவும் அவசியமாகும். வாழ்வில் வரும் கடினமான சூழ்நிலைகளைக் குறையாகப் பார்க்காமல் அனுபவமாகக் கருதி கற்றுக்கொள்ள வேண்டும். வள்ளுவரின் கல்விச் சிந்தனை மற்றும் பகவத் கீதையின்படி, அறிவையும் ஞானத்தையும் பெருக்குவதே ஒவ்வொருவரின் லட்சியமாக இருக்க வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது. எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றோரின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் மறைந்த தலைவர்களின் வழிகாட்டுதல்கள் இக்கல்லூரிக்குச் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சின்னங்களாகும் என தெரிவித்தார். 


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது: 



இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக எப்போது சமநிலை அடையும் என்பது அரசு நிர்ணயம் செய்யும் விஷயம் அல்ல. அது தன் சமநிலையை இயற்கையாகவே அடையும்.  அதாவது இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்பது இந்திய ரூபாயின் மதிப்பு ஒரேடியாக குறையவோ, அதிகரிக்கவும் விடாமல் பார்த்துக்கொள்வது. அதே வேலையில் ரிசர்வ் வங்கியும் இந்திய ரூபாயின் மதிப்பு இந்த நிலையில் தான் இருக்க வேண்டும் என்ற வரம்பை நிர்ணயிப்பது கிடையாது. 



சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்தில்

வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு இருப்பதாக எழுந்த தேசம் முழுவதும் எழுந்த  புகாரை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.  இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடி நியாயம் கேட்கலாம் அது ஒரு வழிமுறை, அல்லது போராட்டம் வாயிலாக  ஞாயம் கேட்கலாம் இது இரண்டாவது வழிமுறை. எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக இரண்டாவது வழிமுறை தற்போது கையாண்டு வருகின்றனர். 


தமிழ்நாடு அரசின் கடன் நிலை குறித்து சட்டமன்றத்தில் பேச வேண்டும். அதாவது, எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டும். அதன் வாயிலாக மாநில மக்களுக்கு நிதிநிலை குறித்த தெளிவு கிடைக்க பெறும். மத்திய அமைச்சராக நான் ஒரு தனிப்பட்ட மாநிலத்தின் நிதிநிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவது உகந்ததாக அமையாது.


 தேசத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 2014 ஆம் ஆண்டு முதல் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் வேளாண் சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்துவதில் ஏற்படும் தட்டுப்பாடுகளை தவிர்க்க  விநியோக மேலாண்மை அந்த குழு கையாண்டு வருகிறது. தற்போது வரை அந்த குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதன் வாயிலாகவே ஏற்றுமதியில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச உதவி தொகை போன்றவை சரியாக வழங்கப்பட்டு வருகிறது. 


தேசத்தின் கடன் சுமையை குறைக்க கொரோனா தேசிய பேரிடருக்கு முந்தைய காலகட்டத்திலும் அதற்கு பிந்தைய காலகட்டத்திலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது இதற்கு நான் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

வருவாய் முதலீடு மற்றும் வருவாய் பற்றாக்குறை ஆகியவை குறித்த தரவுகள் ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 2030 ஆம ஆண்டுக்குள் 

 

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% மட்டுமே கடனாக இருக்கும் என நமது அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேசத்தின் கடனை குறைக்க தேவையான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை வெளிநாடுகளை ஒப்பிட்டு பார்த்தால் தெரியும் இதையே தான் பல அயலக நாட்டு அமைப்புகள் இந்திய தேசத்தின் கடன் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது என தரவுகள் அடிப்படையில் தெரிவித்து வருகின்றனர்.

தனிநபர் வருவாய் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் அதை உயர்த்தவும் மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது அதாவது கொரோனா தேசிய பேரிடர் காலத்தை தொடர்ந்து வந்த இடர்பாடுகளை சமாளித்து அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் தற்போதும் மேற்காசிய நாடுகள் போர் காரணமாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை எதிரொலியாக நமது நாட்டில் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வு மக்களை பாதிக்காத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments