// NEWS UPDATE *** ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இன்று முதல் விலையில்லா வேட்டி - சேலை விநியோகம். முதியோர் ஓய்வூதியதார‌ர்கள் வரும் 7ம் தேதி வரை குடும்ப அட்டையுடன் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் - கூட்டுறவுத் துறை அறிவிப்பு *** கோவையில் சமூக சேவைக்காக விருது பெற்றார் திருச்சி வழக்கறிஞர் ஐயப்பன் இயக்குநர் பேரரசு கையால் விருது பெற்றதில் பெருமை!

கோவையில் சமூக சேவைக்காக விருது பெற்றார் திருச்சி வழக்கறிஞர் ஐயப்பன் இயக்குநர் பேரரசு கையால் விருது பெற்றதில் பெருமை!

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறந்த சமூக சேவையைப் பாராட்டி திருச்சி வழக்கறிஞர் ஐயப்பனுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கடந்த 2006-ஆம் ஆண்டு புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்தை வைத்து தர்மபுரி திரைப்படத்தை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநருமான பேரரசு கரங்களால் இந்த விருதைப் பெற்றுக்கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது என திருச்சி வழக்கறிஞர் ஐயப்பன் தெரிவித்துள்ளார் .இந்தச் சிறப்பான தருணத்தில், விருதை வழங்கி கௌரவித்த இயக்குநர் பேரரசு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த அளவிற்கு சமூக சேவையில் ஈடுபடுவதற்கு உத்வேகமாகவும், ஊக்கமாகவும் இருந்து வரும் நான் வணங்கும் கடவுள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், தினமும் தாயாகப் போற்றி வணங்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அவர்களுக்கும் இந்த விருதை காணிக்கையாக்குகிறேன்.சமூக சேவைக்கான இந்த அங்கீகாரம், தொடர்ந்து மக்களுக்காகப் பணியாற்றுவதற்கான மேலும் ஒரு உந்துசக்தியாக இருக்கும் என தெரிவித்துள்ளார் 

Post a Comment

0 Comments