// NEWS UPDATE *** ஜெம் வீரமணி வழக்கில் 20ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு: போக்சோ நீதிமன்றம் *** திருச்சி கே.கே.நகர் எல்ஐசி காலனியில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் புதிய பிரம்மாண்ட கிளை திறப்பு!

திருச்சி கே.கே.நகர் எல்ஐசி காலனியில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் புதிய பிரம்மாண்ட கிளை திறப்பு!

தமிழகத்தில் பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு, 40-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க முன்னணி நிறுவனமான 'அஷ்வின் ஸ்வீட்ஸ்' தனது புதிய கிளையை திருச்சி கே.கே. நகரில் இன்று பிரம்மாண்டமாகத் திறந்துள்ளது.

முன்னதாக சுந்தர் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த இக்கிளை, வாடிக்கையாளர்களின் வசதிக்காக கே.கே.நகர் எல்.ஐ.சி.காலனி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, விரிவான கட்டமைப்புடன் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.ஆர்.வி. கணேசன் கலந்துகொண்டு, புதிய கடையை திறந்து வைத்தார்.


இந்த புதிய கிளையில், அனைத்து வகையான இனிப்பு வகைகள், கார வகைகள் மற்றும் பேக்கரி உணவுப் பொருட்கள் உயர்ந்த தரத்துடனும், நியாயமான விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. 

இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் அமர்ந்து சுவைத்து மகிழும் வகையில் விசாலமான சைவ உணவகமும் இங்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் முக்கிய தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments