// NEWS UPDATE *** தொழிலதிபர் வீரமணியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் வீரமணி ஆஜர் *** திருச்சி உறையூர் ஷா பத்திரியாலம் தர்ஹா, சந்தனக்கூடு விழா

திருச்சி உறையூர் ஷா பத்திரியாலம் தர்ஹா, சந்தனக்கூடு விழா

திருச்சி உறையூர் செவந்தி பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் உள்ள ஷா பத்திரியாலம் தர்ஹா, சந்தனக்கூடு கொடியேற்றம் சந்தனம் பூசும் (உரூஸ்) விழா நடைபெற்றது

வக்பு கண்காணிப்பாளர், திருச்சி காதர் ஷெரிப்,மற்றும் திருச்சி வக்பு ஆய்வாளர், முஹம்மது யூசுப்,  ஆகியோர் தலைமையிலும் உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சையத் தாஜுத்தின் அஸ்லம், முன்னிலையிலும் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு தர்காக்கள் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன், மீர் ஹஸனுல்லாஹ் ஷா தர்கா,காதர் ஷெரிப் , 



அ.இ.அ.தி.மு.க மாநிலப் பொதுக்குழு உறுப்பினார், அப்துல் ரஹ்மான் என்கின்ற அப்பாக்குட்டி , அர்ரஹ்மான் ஹஜ் சர்வீஸ், ரிஸ்வான் உசேன் , தமிழ்நாடு வக்பு & பர்சனல் லா கவுன்சில் மாநில துணைத் தலைவர் அமீர்கான்,டிட்டிபி தர்கா முத்தவல்லி அப்துல் கபார் என்ற பாபு,

யக்கத் அலி, பரக்கத் நிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.பரம்பரை முத்தவல்லிகள் பசல் அகமது, பஷீர் அகமது, ஷபி அகமது ஆகியோர் கலந்து கொண்டனர் 


இந்த விழாவில் தர்காவின் கொடிக்கு சந்தனம் பூசி துவா ஓதி கொடியேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து பாத்திஹா ஓதப்பட்டு அனைவருக்காகவும் துவா செய்யப்பட்டது.மேலும் கபூருக்கு சந்தனம் பூசப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு பிரார்த்தனை நடைபெற்றது பிரார்த்தனையில் உலக அமைதிக்காகவும் மழை வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.தொடர்ந்து இரவு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது

Post a Comment

0 Comments