// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா - இஸ்ரேலை கண்டித்து திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா - இஸ்ரேலை கண்டித்து திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட  மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி சார்பில் ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியே படுகொலை செய்த அமெரிக்கா, இஸ்ரேல்  நாடுகளை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து, மெழுகுவர்த்தி  ஏந்தி கண்டன போராட்டம் மாவட்டத் தலைவர் பாபு தலைமையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாநில செயலாளர் தஞ்சை அகமது கபீர், மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி ஷரிப் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.




ஆர்ப்பாட்டத்தின் போது கருப்பு சட்டை அணிந்து கையில் மெழுகுவர்த்தி கையில் ஏந்தி அமெரிக்கா இஸ்ரேலை கண்டித்து கோஷமிட்டனர் .



இதேபோல் கண்டன உரையை  இஸ்லாமிய உரிமை பாதுகாப்பு கழகம் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், தோழர் மாறன், தமிழக வாழ்வுரிக் கட்சியின் நிர்வாகிகள்  ராயல் ராஜா, வழக்கறிஞர் பிரபு,  எஸ் டி பி ஐ மாநில பேச்சாளர் ஜாகிர் உசேன், தெற்கு மாவட்ட தெற்கு மாவட்ட தலைவர் தமீம்அன்சாரி  உட்பட பலர் வழங்கினர்.

இதில் நிர்வாகிகள் ராஜா முகமது,  சிராஜுதீன், அப்துல் ஹமீது, ஜமால், யாசர்செரீப், உட்பட ஏராளமானோர்  பங்கேற்றனர்.


Post a Comment

0 Comments