// NEWS UPDATE *** ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத் தொகை... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி *** திருச்சி மாநகராட்சி பொது நிதியிலிருந்து எந்தப் பணிகளும் வார்டுகளுக்கு செய்யவில்லை என குற்றச்சாட்டு: திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக - திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி பொது நிதியிலிருந்து எந்தப் பணிகளும் வார்டுகளுக்கு செய்யவில்லை என குற்றச்சாட்டு: திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக - திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன் ,துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர் பாலு, நகரப் பொறியாளர் பி. சிவபாதம் ,மண்டலக்குழுத் தலைவர்கள்  மதிவாணன்,  துர்காதேவி,    விஜயலட்சுமி கண்ணன், ஜெய நிர்மலா,மாமன்ற  உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள்,  மாநகராட்சி உதவி ஆணையர்கள்,   உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் பட்ஜெட்டை வரவேற்றுப் பேசினர்.


கேள்வி - அம்பிகாபதி (திருச்சி மாநகராட்சி அதிமுக மாமன்ற உறுப்பினர்)


திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய பணிகளுக்கு மாநகராட்சி பொது நிதி முழுவதையும் முன்னிட்டு செலவழித்து விட்டனர்.இதனால் வார்டுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை.கேட்டால் அதை செய்துள்ளோம், இதை செய்துள்ளோம் என்று கூறுகிறார்கள்.பஞ்சப்பூர் பஸ் நிலையம் இதுவரை நடந்த பணிகள் குறித்து முழு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

பதில் - முத்துச்செல்வம் (நிதிக்குழு தலைவர்)

திருச்சி மாநகராட்சியில் எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகள் நடந்துள்ளன.திருவெறும்பூர் பஸ் நிலையம்,திருவரங்கம் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது என்றார்.அப்போது அதிமுக கவுன்சிலர்களுக்கும்,திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதை அடுத்து,அதிமுக கவுன்சிலர்கள் கோ.கு. அம்பிகாபதி அரவிந்தன், அனுசியா ரவிசங்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.





பின்னர் அவர்கள் வெளியே வந்தபின் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளுக்கு மாநகராட்சி பொது நிதி முழுவதையும் செலவழித்து விட்டார்கள் இதனால் வார்டுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை கடந்த பட்ஜெட்டில் 110 கோடிக்கு வெள்ள தடுப்பு சுவர் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு அந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.பஞ்சப்பூர் பேருந்து முனையம் முன்பாக விபத்துகளை தடுக்க என் மேம்பாலம் கட்டவில்லை என கேள்வி எழுப்பினேன். அதற்கு மேயர் உங்கள் பொதுச் செயலாளர் இடம் சொல்லி பிரதமரிடம் நிதி ஒதுக்க சொல்லுங்கள் என கேலி செய்கிறார்கள். இதனால் வெளிநடப்பு செய்தோம்.இது பற்றி கேள்வி எழுப்பினால் எங்களை அவமதிக்கிறார்கள் என்றார் தொடர்ந்து மாநகராசி அதிமுக மாமன்ற உறுப்பினர் 

சி.அரவிந்தன் கூறும்போது..

பஞ்சப்பூரில் ரூபாய் 250 கோடி செலவில் கட்டப்பட்ட லாரி முனையம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை இது தொடர்பாக மாநகராட்சியில் கேள்வி எழுப்பியபோது மேயர் பதிலளிக்காமல் அவரது தூண்டுதலின் பேரில் திமுக கவுன்சிலர்கள் கேலியும் கிண்டலும் செய்தனர். அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மொத்தம் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments