// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** மாநில அளவிலான சிலம்பு போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாணவர்கள் வெற்றி

மாநில அளவிலான சிலம்பு போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாணவர்கள் வெற்றி

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் விளையாட்டு பிரிவு சார்பாக சிலம்பு பயிற்சி நடைபெற்றும் வரும் சூழ்நிலையில் (10-09-2023) இன்று ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூரில் மாநில அளவிலான சிலம்பு போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் விளையாட்டு பிரிவு மாணவர்கள் கலந்துக்கொண்டனர்..


இதில் யூணுஸ் 12 வயதுக்கான சுற்றில்  20 பாய்ன்ட்களும் மூலம் மூன்றாம் இடத்திலும்,முஹமது சல்மான் 14 வயதுக்கான சுற்றில் 20  பாய்ன்ட்களும் பெற்று மூன்றாம் இடத்திலும்,13 வயதுக்கான சுற்றில் கார்த்திக் 25 பாய்ன்ட்களும் பெற்று   முதல் இடத்திலும், முஹமது இர்ஃபான் 22 பாய்ன்ட்களும் பெற்று  முதல் இடமும் பிடித்துள்ளார்

இதுவரை மாநில அளவிலான போட்டிகளில் 8 மாணவர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர் எனவே யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்  சார்பாக கலந்துக்கொண்ட மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்றதற்கு பயிற்சி, ஊக்கம்,பொருளாதாரம் போன்ற உதவிகளை செய்யும் அனைத்து தரப்பினருக்கும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் நன்றியை தெரிவித்து கொண்டார்


Post a Comment

0 Comments