// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி தேசிய கல்லூரியில் கணித புத்தகம் வெளியீடு

திருச்சி தேசிய கல்லூரியில் கணித புத்தகம் வெளியீடு

திருச்சி தேசியக்கல்லூரியில்  முனைவர் மஞ்சு சோமநாத் மற்றும் முனைவர் J கண்ணன் அவர்களால்  "FUNDAMENTAL PERCEPTIONS IN CONTEMPORARY NUMBER THEORY" என்ற தலைப்பில் எழுதப்பட்ட கணித புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகம் அமெரிக்கா- வை  (USA ) தலைமை இடமாகக்கொண்ட "Nova Science Publishers" என்ற புத்தக நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.


விழாவில் புத்தகத்தை பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் M . செல்வம் அவர்கள் வெளியிட, ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் M .A கோபாலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய துணைவேந்தர் இதுமாதிரியான சிறந்த புத்தகங்களை மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 

நிகழ்ச்சியை முனைவர் V . சங்கீதா தொகுத்து வழங்கினார்

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments