NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி அஞ்சலி செலுத்தினார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி அஞ்சலி செலுத்தினார்

  மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு, வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.


தொடர்ந்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்வை  மணிகண்டம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாடு செய்திருந்தார் ‌








அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் தாடி ராசு,  மாநில இளைஞரணி இணைச் செயலாளர் பொன் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சேவியர், மண்டல துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, சார்பு அணி செயலாளர் கண்ணதாசன், புல்லட் ஜான், சோனா விவேக், கோப்பு நட்ராஜ், சமயபுரம் சோமு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Post a Comment

0 Comments