NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அஞ்சலி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அஞ்சலி

 முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில், மாவட்ட அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார். 


தில்லை நகர் பகுதி 52 வது வட்ட செயலாளர் ஜான் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். 


மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் தன்சிங், பகுதி செயலாளர்கள் கல்நாயக் சதீஷ், வேதாந்த்ரி பாலு, உமாபதி, சார்பு அணி செயலாளர் தண்டபாணி, நாகூர் மீரான், ஜான் கென்னடி, என்.எஸ்.தருண் மற்றும் தில்லைநகர் பகுதி நிர்வாகிகள், தில்லைநகர் பகுதி வட்டச் செயலாளர்கள்,  நிர்வாகிகள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments