NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** திருச்சி அதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் வரும் ஜன-25ம் தேதி நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் அஞ்சலி குறித்து மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்

திருச்சி அதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் வரும் ஜன-25ம் தேதி நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் அஞ்சலி குறித்து மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965 ஆம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி, தென்னூர், அண்ணா நகர் பகுதியில் உள்ளன. இந்த நினைவிடங்களில் அதிமுகவினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.


அதன்படி வருகிற 25ஆம் தேதி, திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது தொடர்பாகவும், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் நடத்துவது, திருச்சி மாநகர் மாவட்ட கழகத்தில் பொதுக் கூட்டம் நடத்துவது  உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள, அதிமுக மாவட்ட அலுவலகத்தில், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், முஸ்தபா, வட்டக் கழக செயலாளர்கள், மாணவரணியினர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments