இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965 ஆம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் உள்ளன.
இந்த நினைவிடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25 ஆம் தேதியில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளாக அ.தி.மு.க, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனுசரித்து வருகின்றன.
தொடர்ந்து வீரமரணமடைந்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஆதரவாக வீரவணக்கம் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, முன்னாள் எம்.பி ரத்தினவேல், துணை செயலாளர் வனிதா மற்றும் இளைஞரணி செயலாளர்கள், மாணவர் அணியினர், மகளிர் அணியினர் உள்பட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 Comments