NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மொழிப்போர் தியாகிகளுக்கு அமமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி

மொழிப்போர் தியாகிகளுக்கு அமமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி

 மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் - திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.


தமிழ்மொழிக்காக பாடுபட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி போற்றிடும் வகையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் ஜனவரி 25ம் நாளான இன்று தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது.அதன்படி மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில் மொழிப்போர்தியாகிகள் வீரவணக்கம் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது. தமிழ்மொழிக்காக பாடுபட்டு இன்னுயிர் நீத்த தியாகவேங்கைகளான விராலிமலை சண்முகம், கீழப்பழுர் சின்னச்சாமி ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும்வகையில், திருச்சி தென்னூர் அண்ணாநகரில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கட்சியினர் பேரணியாக வந்து தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 



இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் , மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகூர் மீரான் .வடக்கு மாவட்ட செயலாளர் தொட்டியம் ராஜசேகர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் மற்றும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

Post a Comment

0 Comments