NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சியில் தேமுதிகவினர் அமைதி ஊர்வலம்

திருச்சியில் தேமுதிகவினர் அமைதி ஊர்வலம்

தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கு  திருச்சியில் மவுன அஞ்சலி ஊர்வலம் - அன்னதானம் வழங்கிய தேமுதிகவினர்.


தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த விஜயகாந்திற்கு இரங்கல் செலுத்தும் விதமாக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற மவுன அஞ்சலி ஊர்வலம் திருச்சியில் கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி எல்ஐசி காலணி வரை நடைபெற்றது.




அந்த அமைதி ஊர்வலம் இறுதியில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஏர்போர்ட் பகுதி செயலாளர் குமார் மற்றும் வழக்கறிஞர் ஐயப்பன் செய்திருந்தனர்.





இந்த மவுன ஊர்வலத்தில் மாநில மாற்றுத்திறனாளி துணைச் செயலாளர் வாஞ்சி குமரவேல், மாநிலத் தேர்தல் பணிக்குழு தங்கமணி ,முன்னாள் மாவட்ட செயலாளர் விஜயராஜன் ,மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமன் ,பொருளாளர் மில்டன் குமார் ,மாவட்ட தொழிற்சங்கம் திருப்பதி ,  மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்குமார் ,பிரித்தா விஜய் ஆனந்த், வெங்காயம் மண்டி காளியப்பன், பொதுக்குழு உறுப்பினர் பெருமாள் ,கலைப்புலி பாண்டியன் ,பகுதி செயலாளர்கள் அரியமங்கலம் அலெக்சாண்டர்,உறையூர் மோகன் ,பாலக்கரை சங்கர் ,ஆட்டோ கோபால் ,பழனிச்சாமி ,வெல்டிங் சிவா ,மலைக்கோவில் கார்த்திகேயன் ,அன்வர் அலி , ராஜா மற்றும் மகளிர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதங்களை கண்ணீர் மல்க வெளிப்படுத்தினர்.

Post a Comment

0 Comments