BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** பன்னாட்டுக் கருத்தரங்கின் நிறைவு விழா தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்பு

பன்னாட்டுக் கருத்தரங்கின் நிறைவு விழா தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்விகள் துறை சார்பில் விளையாட்டுத் துறை மறுமலர்ச்சிக்கான  சவால்கள் உத்திகள் தேர்வுகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் 7 ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் குறும்படம் மற்றும் செல்பேசி ஆவணப்படப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

ஆயுர்வேதம், கணினி அறிவியல் , உணவு மேலாண்மை ,  வரலாறு மற்றும் இலக்கியம் , உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் செயல் திறன், உள்நாட்டு விளையாட்டுக் கட்டமைப்புகள், மருத்துவம் , உயிர் இயக்கவியல் , மனவளம்,  தொழில்நுட்பம் தொடங்கி யோகக் கலை வரை உடற்கல்விசார் பல்வேறு பொருண்மைகளில் உலகின் 38 நாடுகளில் உள்ள உடற்கல்விசார் வல்லுநர்களும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து உடற்கல்வியியல் துறை பேராசிரியர்கள் , ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று  நடைபெற்றது.


நிறைவு விழாவில்  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் வரவேற்புரை வழங்கினார்.எக்ஸெல் குழுமங்களின் நிறுவனர் மற்றும் ரோட்டரி ஆளுநர்  முருகானந்தம், ஒலிம்பிக் விருதாளர் பத்மஸ்ரீ பாஸ்கரன், ஜெர்மனி நாட்டின் ஒலிம்பிக் அகாதமி ஒருங்கிணைப்பாளர் ஹானோ ஃபெல்டர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.தேசியக் கல்லூரியின் செயலர் கா.ரகுநாதன் முன்னிலை வகித்துச் சிறப்பித்தார்
நிறைவு விழாவில் சிறப்புரை வழங்கிய  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நம் பாரதத் திருநாடு எண்ணற்ற விளையாட்டு வீரர்களை உலகிற்கு வழங்கிய பெருமை மிக்கது என்றும்,  பாரதப் பிரதமர் அவர்கள் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வண்ணம் ஃபிட் இந்தியா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினரை ஊக்குவித்து வருகிறார். 


பாரம்பரிய விளையாட்டுக்கள் உடலையும், உள்ளத்தையும், வலிமை சேர்ப்பனவாக இருப்பதையும் இன்றைய இளம் தலைமுறையினர் இணையதளம் மற்றும் செல்பேசிக்கு அடிமையாகிவிடாமல் நம் பாரம்பரிய விளையாட்டுக்களில் கவனம் செலுத்த வேண்டும். உலக அரங்கில் பாரதம் தலைநிமிர்வதற்கு விளையாட்டு வீரர்கள் முக்கியப் பங்காற்றுவதையும் நினைவு கூர்ந்தார்

நாட்டுக்காக அர்ப்பணிப்போடு செயல்படும் விளையாட்டு வீரர்களை நாடு என்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கும் என்றும் விளையாட்டு வீரர்கள் நாட்டின் அடையாளத்தைப் பறைசாற்றும் தூதர்களாக விளங்குவதைப் பெருமையோடு எடுத்துரைத்தார். அடுத்த தலைமுறை மாணவர்களை சமூக பண்புமிக்கவர்களாகக் கட்டமைப்பதில் உடற்கல்வியியல் துறைக்கு முக்கியப் பங்கு உண்டு என்று தன் சிறப்புரையில் பதிவு செய்தார். நிறைவாக ஐந்தாவது முறையாக வெற்றிகரமாக இப்பன்னாட்டுக் கருத்தரங்கினை ஒருங்கிணைத்த கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி அவர்கள் மாநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டு ஏற்புரை வழங்கினார். ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் கார்த்திகேயன் நன்றியுரை வழங்கினார்


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments