சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த இளம் வீரர் பிரணவ்தனீஸ் இமாலய சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுவர் ஸ்கேட்டிங் (4 வயது முதல் 12 வயது வரை) போட்டியில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சார்ந்த பிரசாந்த் மற்றும் சர்மதா தம்பதியினுருடைய புதல்வனும், எஸ் ஆர் எம் யூ துணைப் பொதுச்செயலாளரும், திருச்சிக்கோட்ட செயலாளரும், திருச்சி, பொன்மலை பகுதியின் பொறுப்பாளருமாகிய எஸ்.வீரசேகரனின் பேரனுமாகிய அகோர்பத்ரன் (எ) பிரணவ்தனீஸ் Small dash 4 minuts -1 st place goldmedal,
ZIGZAG skating race -1st place gold medal solo skate dance, group skate dance உள்பட அனைத்துப்போட்டிகளிலும் வெற்றிப்பெற்று அரங்கம் ஆர்ப்பரிக்க நான்கு கோல்டு மெடல், மூன்று ஷீல்டு பெற்று திருச்சி திரும்பி உள்ளார் .ஆயிரக்கணக்கானவர் மத்தியில் நான்கு வயதிற்கு மேற்ப்பட்ட பனிரெண்டு வயதுக்கு உட்பட்ட போட்டியில் முத்திரைபதித்து , திருச்சிக்கு பெருமைதேடி வந்துள்ளார் .மேலும் விண்ணைமுட்டும் கரகோஷத்தோடு அந்த மழலை செல்வம் பிரணவ் தனிஷை கொண்டாடியது காண்போரின் நெஞ்சத்தை மகிழச்செய்தது.
0 Comments