BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி மாணவிக்கு தமிழக அரசு விருது உற்சாக வரவேற்பு

திருச்சி மாணவிக்கு தமிழக அரசு விருது உற்சாக வரவேற்பு

 தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாநில விருது பெற்ற திருச்சி மாணவிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!


பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்கள் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மாநில விருது வழங்கப்படுகிறது. 




அதன்படி பெண் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு, கிராமப்புற விளையாட்டுகளுக்கு பெண் குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றில் சமூக பங்களிப்பை செய்து வரும் திருச்சி ரஞ்சிதபுரத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி மோ.பி. சுகித்தா இந்த ஆண்டிற்கான மாநில விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு சென்னையில் நேற்று நடைபெற்ற (06.02.24) விழாவில் பெண்கள் முன்னேற்றத்திற்கான விருது, பாராட்டு பத்திரம்,  1 லட்சத்திற்க்கான காசோலை ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து ரயில் மூலம் திருச்சி வந்தடைந்த மாணவி சுகித்தாவுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் மாலை அணிவித்து  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 



இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளன செயலாளர் ரவிச்சந்திரன், தலைவர் மோகன், கணேசன், பேராசிரியர் சதீஷ் குமார்,  சற்குணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments