// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** மதுரையில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி தமிழ்நாடு மாநில மாவட்ட மற்றும் அனைத்து நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம்

மதுரையில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி தமிழ்நாடு மாநில மாவட்ட மற்றும் அனைத்து நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம்

ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி தமிழ்நாடு மாநில மாவட்ட அனைத்து நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் மதுரை மாட்டுத்தாவணி அருகே தனியார் அரங்கில் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் தேசிய‌ பொதுச்செயலாளர் ஜி.வி  மணிமாறன், தமிழ்நாடு மாநில தலைவர் நாகேஸ்வரன் , தமிழ்நாடு துணை தலைவர் பொன்னுசாமி , தமிழ்நாடு மாநில துணை  தலைவர் கார்த்திக் குமார்  , மாநில செயலாளர் ராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


மதுரை மாவட்ட தலைவர் ரத்தினவேல், சிவகங்கை மாவட்டம் தலைவர் முத்துராமலிங்கம் , ராமநாதபுரம் மாவட்டம் தலைவர் குண சேகர பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினார்.மாவட்ட துணை தலைவர்கள்‌ முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் ராமசந்திரன் பாஸ்வான் ஆகியோர் திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்..

இந்த கூட்டத்தில் நிர்வாகிகளிடம் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது

Post a Comment

0 Comments