திருச்சி சில்வர் லைன் மருத்துவமனை சார்பில் புற்றுநோயிலிருந்து குணமடைந்த வெற்றியாளர்களுக்கான 8வது வெற்றியாளர் தினம் திருச்சி சாலை ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ சங்க மன்றத்தில் சில்வர்லைன் மருத்துவமனையின் மேலாண் இயக்குனரும், அறுவை சிகிச்சை புற்றுநோய் நிபுணருமான மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மருத்துவர்கள் சிவப்பிரகாஷ், ராகுல், சங்கர், மற்றும் சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா கலந்துகொண்டு ஊக்க உரையாற்றினார்.இந்நிகழ்வில் புற்று நோயிலிருந்து குணமடைந்த நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர்.முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவர்கள் நரேந்திரன், சிவபிரகாஷ்,ராகுல் ஆகியோர் மூடநம்பிக்கை தாண்டி புற்று நோயைக் குணப்படுத்த முடியும் என்பதற்கு ஓருபடியாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது அதற்கான இந்த செய்தியாளர்கள் சந்திப்பு பல வருடங்களுக்கு முன்பாக இருந்து சிகிச்சையில் இப்பொழுது நவீன சிகிச்சை முறைகள் கையாளப்பட்டு வருகிறது.மரபணு தாக்குதலை தாண்டி புற்று நோய்கள் குணமாகும் வழிமுறைகள் பல உள்ளது.
குரல் வளையில் ஏற்பட்ட புற்றுநோய் குணப்படுத்தப்பட்டு தற்பொழுது அந்த நோயாளி குணமடைந்த தன்னுடைய அனுபவங்கள் பகிர்ந்து கொண்டார்.
இதேபோல் சுரேஷ் என்பவருக்கு வயிற்றுப் பகுதி ஏற்பட்ட 24கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி அவர் குணமாக்கப்பட்டு தன்னுடைய அனுபவங்களையும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டனர்.இந்தியாவைப் பொறுத்தவரை 1.5 மில்லியன் புற்றுநோயின் பாதிப்பு ஏற்படுகிறது. சுமார் 80லட்சம் இறப்பு ஏற்படுகிறது.
ஆரம்ப நிலையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் போது அதை குணப்படுத்த முடியும்.உலகின் பார்க்கும் போது பிரஸ்ட் கேன்சல் முதன்மையாக உள்ளது.ஆரம்பகட்டத்தில் அனைத்து புற்று நோயையும் கண்டறிந்து குணமாக்குவது எளிது என்பதை தெரிவித்தார்.






0 Comments