// NEWS UPDATE *** எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள் - மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிப்பு *** படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வெளியில் இருக்கும் சூழலில், வங்கித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரந்தரப் பணியாளர்களாக நிரப்ப வேண்டும் - இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொது செயலாளர் பேட்டி.

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வெளியில் இருக்கும் சூழலில், வங்கித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரந்தரப் பணியாளர்களாக நிரப்ப வேண்டும் - இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொது செயலாளர் பேட்டி.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ரவிக்குமார், திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 14வது தமிழ்நாடு மாநில மாநாடு திருச்சியில் நாளை மற்றும் நாளை மறுதினம் (ஜூலை 25, 26) இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டை அகில இந்தியப் பொதுச்செயலாளர் டிபார்சிஸ் பாசு துவக்கி வைக்கிறார். மேலும் இம்மாநாட்டில் சிஐடியு மாநில செயலாளர் கண்ணன், கீழவேலூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிட்டி கட்சி எம்.எல்.ஏ. லதா, அகில இந்தியத் தலைவர் தோழர் அனில் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். 


1969 ஜூலை 19-க்கு முன்பு வரை 14 வணிக வங்கிகள் தனியார் வசம் இருந்ததால், சாதாரண மக்களால் அணுக முடியாத நிலையிருந்தது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர்தான், பொதுமக்களின் சேமிப்பு மற்றும் கடன் வசதிகள் மக்களையும், விவசாயிகளையும், மாணவர்களையும், பெண்களையும் சென்றடைந்தன.


பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் தொடர்ந்து பொதுத்துறையாகவே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இவைகளைத் தனியார் கைகளில் ஒப்படைக்கும் அரசின் முயற்சிகளை சம்மேளனம் தொடர்ந்து எதிர்த்து முறியடிக்கும்.

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வெளியில் இருக்கும் சூழலில், வங்கித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரந்தரப் பணியாளர்களாக நிரப்ப வேண்டும். போதிய ஆட்கள் இல்லாததால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படுவதோடு, ஊழியர்களுக்கு பணிச்சுமையும் அதிகரிக்கிறது.பல துறைகளில் வாரத்திற்கு ஐந்து நாள் பணி நடைமுறையில் உள்ள நிலையில், வங்கித்துறை மட்டும் ஆறு நாள் பணியாகத் தொடர்வதை மாற்றி, வாரத்திற்கு ஐந்து நாள் மட்டுமே பணி என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். 



Post a Comment

0 Comments