BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** உலக மகளிர் தின விழா திருச்சியில் நடைபெற்றது

உலக மகளிர் தின விழா திருச்சியில் நடைபெற்றது

மனிதம் சமூக பணி மையம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இணைந்து உலக மகளிர் தின விழா மார்ச் 9 மாலை ஆறு மணி அளவில் புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் மாதர்சம்மேளன மாநகர் மாவட்ட செயலாளர் அஞ்சுகம் தலைமையில் மனிதம்சமூக பணி மைய இயக்குனர் தினேஷ் குமார் வரவேற்புரையுடன் நடைபெற்றது. பார்வதி,ஆயிஷா,  ஈஸ்வரி ,புஷ்பம் வைத்தியநாதன், லாவண்யா முத்துலட்சுமி, ரஷ்யா பேகம் ,மருதாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .


சரஸ்வதி பாலா மந்திர் மாணவிகளின் பட்டிமன்றம், உரைவீச்சு, நடன நிகழ்ச்சிகளும்-படையப்பா பறை இசை குழுவினரின் தப்பாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது..


பெண்களுக்கு எதிரான மனுநீதி என்கிற தலைப்பில் இந்திய மாதர் தேசிய சம்மேளன தேசிய செயலாளர் பத்மாவதி பெண்கள் பற்றி பிஷப்ஹீபர் கல்லூரி தமிழாய்வுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் பாலின் ப்ரீத்தா ஜெபசெல்வி பெண்அரசியலை பற்றி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்  கவிஞர் பிரியதர்ஷினி உரை நிகழ்த்தினர்.



சாதனை பெண்களுக்கு விருது வழங்குதல் 

சாதனை புரிந்த ஐந்து பெண்களுக்கு விருதுகளை இந்திய மாதர் தேசிய சம்மேளன தேசிய செயலாளர் பத்மாவதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் மனிதம் சமூகப் பணி மைய இயக்குனர் தினேஷ் குமார் ஆகியோர் பதக்கம் மற்றும் கேடயங்களை வழங்கியும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தனர். இறுதியாக மாதர் சம்மேளன மேற்கு பகுதி செயலாளர் சுமதி நன்றி கூறினார் .

Post a Comment

0 Comments