BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** எக்ஸெல் குழும தலைவர் முருகானந்தம் சர்வதேச ரோட்டரி இயக்குனராக தேர்வு

எக்ஸெல் குழும தலைவர் முருகானந்தம் சர்வதேச ரோட்டரி இயக்குனராக தேர்வு

திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவரும், மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் பொதுசெயலாளரும், முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநருமான  முருகானந்தம் சர்வதேச ரோட்டரி இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சர்வதேச அளவில் 17 பேர் மட்டுமே இதில் இயக்குனர்களாக உள்ளனர். அதில் ஒருவராக முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர் மற்றும் இந்த போர்டு இயக்குனர்கள் தான் ரோட்டரி திட்டங்களை வடிவமைப்பார்கள்.அதைத்தொடர்ந்து இன்று மதியம் 12 மணிக்கு திருச்சியில் அவருக்கு ரோட்டரி நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.  பின்னர் முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்...

அப்போது அவர் கூறியதாவது;-

சர்வதேச ரோட்டரி என்பது 119 ஆண்டுகளைக் கடந்து சமூக சேவையை நோக்கமாக வைத்து 1.4 மில்லியன் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.


உலகளாவிய போலியோ ஒழிப்புக்கு ரோட்டரி இதுவரை 36 ஆயிரம் கோடி செலவழித்துள்ளது.போலியோவை ஒழித்ததில் ரோட்டரிக்கு முக்கிய பங்கு உள்ளது. தற்போது போலியோ 99.9 சதவீதம் குறைந்துள்ளது. உலகின் 122 நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட மூன்று பில்லியன் குழந்தைகளை இந்த முடக்குவாத நோயிலிருந்து பாதுகாக்க ரோட்டரி உறுப்பினர்கள் 2.1 பில்லியன் அமெரிக்கா டாலர்களை வழங்கி உள்ளனர்.

மேலும் ரோட்டரி அறக்கட்டளை மூலம்உலக அமைதி சமாதானத்தை, மேம்படுத்துதல், கல்வி வழங்குதல், நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாத்தல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு இதுவரை நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக வழங்கி உள்ளது. ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர்களாக இதுவரை 4 இந்தியர்கள் இருந்துள்ளனர்.

ரோட்டரியை பொருத்தமட்டில் இந்த 17 இயக்குனர்கள் குழு இந்த சர்வதேச அமைப்பின் கொள்கைகளை நிறுவுகிறது.

வருகிற 2025- 27 பன்னாட்டு ரோட்டரி இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ள எனக்கு இந்தியா நேபாளம், பூட்டான், இலங்கை,மாலத்தீவு ஆகிய நாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைமைப் பண்பு மற்றும் சமூக சேவைகளை ஈடுபடுத்திக் கொள்ள குழந்தைகளை இப்போது ரோட்டரி அமைப்புகளில் சேர்த்து விட வேண்டும்.

அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை,  என்றார்.

Post a Comment

0 Comments