BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** அமைச்சர் பொன்முடியை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் அறிவிப்பு

அமைச்சர் பொன்முடியை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் அறிவிப்பு

 திருச்சியில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் கருப்பு கோடி கட்டப் போவதாக அறிவிப்பு

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி காட்டூர் அருகே நடைபெற்றது இந்த கூட்டத்தில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார் அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் அவர் கூறுகையில், 


முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் தொடர்ந்து திமுக அரசுக்கு மூன்றாண்டு காலமாக தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.நாடு போற்றும் நல்லாட்சி நடத்தி வரும் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வரும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக இருந்து நல்லாட்சி நடத்தி வருகிறார்,

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு சீட்டு வழங்கி உள்ளதை வரவேற்கிறோம்.


ஆனால் அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியினுடைய அஜந்தாவை தமிழகத்தில்.

இருக்கக்கூடிய கட்சிகள் திமுக அதிமுக காங்கிரஸ் அனைத்தும் செயல்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.


நாடாளுமன்ற தேர்தலிலே முஸ்லிம்களுக்கு சீட்டு கொடுக்காமல் புறக்கணிப்பது

மிகவும் வருத்தம் அளிக்கிறது,


விழுப்புரம் மந்தகரையில் நேற்று மாலை நடைபெற்ற இஃப்தார், நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்,

சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த அமைச்சர் பொன்முடி அவர்கள் செஞ்சி மஸ்தான் பேசிக் கொண்டிருந்த மைக்கை புடிங்கி உனக்கு என்னையா இந்த மாவட்டத்தில் வேலை போயா வெளியில் என்று சொன்னதாக செய்திகள் வந்திருக்கிறது.


ஒரு இஸ்லாமிய சமுதாயம்  நடத்தக்கூடிய நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அந்த அமைச்சர் சிறுபான்மையினர் நடத்தக்கூடிய அந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையைச் சமுதாயத்தை சேர்ந்த அவரை ஒரு அடிமை எண்ணத்தோடு போய வெளியே என்று சொல்லக்கூடிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.


அமைச்சர் பொன்முடி அவர்கள் இது குறித்து பத்திரிகையாளர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மன்னிப்பு கேட்க வேண்டும் அவர் தொடர்ந்து பதவி ஏற்றதிலிருந்து சர்ச்சை கூறிய பேசிக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்துகிறார், 


அந்த வகையில் தேர்தல் நேரத்தில்

இஸ்லாமியர்கள் வாக்கு வங்கிகளை திசை திருப்ப வேண்டும் விழுப்புரத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கழக வேட்பாளர் ரவிக்குமாரை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்அவர் செயல்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.


இது குறித்து அவர் உடனடியாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பக்ருதீன், மாநில இளைஞரணி செயலாளர் கூனி மேடு முஸ்தபா ஆகிய தலைமையில் விழுப்புரத்தில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

திருச்சி தொகுதியில் போட்டியிடும் துரை வைகோ அவர்களுக்கு அமைச்சர்கள்  கே என் நேரு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்சிறப்பான முறையில் வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நேருவின் மகன் அருன் நேரு குறைந்தது 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது தெரிய வருகிறது.

பெரம்பலூரில் உள்ள இஸ்லாமியர்கள் அருன் நேருக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.என்பதை எங்களிடம் கூறினார்கள் நாங்கள் தொடர்ந்து தொகுதி வாரியாக சுற்று பயணம் செய்து வருகிறோம் சிறுபான்மை மக்களுடைய கோரிக்கையை தொடர்ந்து நிறைவேற்றி வரும் திமுக அரசு அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கிடை அதிகப்படுத்தி தரேன் என்று சொன்ன வாக்குறுதியை இந்த பாராளுமன்ற தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும்,

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை பாராட்டுகிறோம் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தை பொறுத்தவரையில் வருகின்ற எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு உரிய வகையில் சட்டமன்றத்தில் தேர்தலில் இட ஒதுக்கீட்டை வழங்கி சீட்டு வழங்க வேண்டும் என்று கூறினார்.

இந்த சந்திப்பில் மாவட்ட செயலாளர் ஷாகிர்கான், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மஜித், செயற்குழு உறுப்பினர் அன்வர்தீன், சிறுபாண்மை பிரிவு ரமேஷ், சசிகுமார்,ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments