// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர வாக்கு சேகரிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர வாக்கு சேகரிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன் செல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வு மற்றும் கூட்டணி கட்சியினர் சந்திப்பு நிகழ்வினை தொடர்ந்து இன்றைய தினம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.


திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இன்று காலை முதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து பின்னர், 





மலைக்கோட்டை வீதிகள், ஆண்டாள் தெரு, இபி ரோடு, பெரியகடை வீதி, தேவதானம், கீரைகொல்லை, மதுரை மெயின் ரோடு, மரக்கடை புனித பல்வேறு பகுதிகளில் செண்டை மேளங்கள் முழங்க கூட்டணி கட்சியினர் மற்றும் அமமுக நிர்வாகிகளுடன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது திறந்த ஜீப்பில் சென்றவாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளர் செந்தில்நாதனுக்கு கூட்டணி கட்சியினர் மற்றும் அவர் சார்ந்த அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Post a Comment

0 Comments