BREAKING NEWS *** சர்ச்சை பேச்சு - ஜாமீன் கோரி மகாவிஷ்ணு மனுத்தாக்கல் *** உங்களுக்கு தான் வெற்றி அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் நம்பிக்கை

உங்களுக்கு தான் வெற்றி அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் நம்பிக்கை

திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை வீரக்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..


அப்போது விவசாய மக்களை சந்திப்பதற்காக விவசாயம் செய்யும் இடத்திற்கே நேரில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது அங்குள்ள விவசாயிகள் அனைவரும் உங்களுக்குத்தான் ஓட்டு, இரட்டை இலை சின்னத்திற்கு தான் ஓட்டு உங்கள் வெற்றி நிச்சயம், நீங்கள் நம்பிக்கையாக செல்லுங்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


அதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் திறந்த வாகனத்தில்  இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேட்பாளர் கருப்பையா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளருக்கு பெண்கள் ஆராத்தி எடுத்து  உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments