BREAKING NEWS *** தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு ***** சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு *** மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மின் கட்டணத்தை 3 வது முறையாக உயர்த்திய திமுக அரசை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்


மின் கட்டணத்தை 3 வது முறையாக உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்காததை  கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், அமைப்பு செயலாளர் ரத்தினவேல், முன்னாள்  ஆவின் சேர்மனும், ஜெயலலிதா பேரவை செயலாளருமான கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


 ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு வழங்கவில்லை என்றும் திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.



   ஆர்ப்பாட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட இணைய செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, திருச்சி மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் அப்பாக்குட்டி,மகளிரணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக்,
 மீனவர் அணி மாவட்ட செயலாளர் தென்னூர் அப்பாஸ்,ஐ.டி.பிரிவு வெங்கட் பிரபு, வக்கீல்கள் முல்லை சுரேஷ், ஜெயஶ்ரீ ,சசிகுமார், எனர்ஜி அப்துல் ரஹ்மான், இன்ஜினியர் இப்ராம்ஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments