NEWS UPDATE *** நெல்லையில் ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ///////\\\\\\\ பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களில் அகற்றிட வேண்டும் - பொதுச்செயலாளர் துரைமுருகன் *** பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மண்டல அளவிலான அபாகஸ், மனக்கணித போட்டி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மண்டல அளவிலான அபாகஸ், மனக்கணித போட்டி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான  மண்டல அளவிலான அபாகஸ், மனக்கணித போட்டி – 7மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு.


பள்ளி மாணவ, மாணவிகளிடையே கணித ஆற்றலை வெளிப்படுத்தி ஞாபகத் திறனை மேம்படுத்தும் வகையில் மணடல அளவிலான அபாக்கஸ் போட்டி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இன்று நடைபெற்றது. 


இப்போட்டியில் திருச்சி, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் உள்பட 7 மாவட்டங்களிலிருந்து 7முதல் 16வயதிலான சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அபாகஸ் பயிற்சிபெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.



மாணவர்களின் மூளைத்திறன், கணித அறிவு மற்றும் ஞாபகசக்தியை அபாகஸ் பயிற்சி வளர்க்கும், 



இதனிடையே குழந்தைகளின் கவனிக்கும் திறன், ஞாபக சக்தி, அறிவுகூர்மை, வேகம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றில் சோதனைக்கு உட்படுத்தபட்டனர். மாணவ, மாணவிகளின் போட்டி மனப்பான்மை மற்றும் தன்னம்பிக்கை அடிப்படையில் 3 சுற்றுகளாக இப்போட்டி கணித திறமைமிக்க மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களுக்கு வழங்கப்பட்ட கணித கேள்விகளுக்கு 3 நிமிடத்தில் தீர்வுகளை அபாகஸ் மூலம் தீர்வு கண்டனர்

இந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.


தற்போது உள்ள குழந்தைகள் செல்போன் மற்றும் வீடியோ கேம்களில் அடிமையாகி உள்ள நிலையில் இதுபோன்ற அபாகஸ் பயிற்சி அவர்கள் அதிலிருந்து மீட்க உதவிகரமாக இருக்கும் மேலும் அவர்களது திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்கின்றனர் போட்டி ஏற்பட்டாளர்கள்.


Post a Comment

0 Comments