// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் மிக பிரம்மாண்டமான வாக்காத்தான் நடைபெற்றது

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் மிக பிரம்மாண்டமான வாக்காத்தான் நடைபெற்றது

லக மகளிர் தினத்தை முன்னிட்டு க்யூரிஸ் மருத்துவமனை குழுமம் மகளிர் மருத்துவ நலனை முன்னிறுத்தி ரோட்டரி குழுமம், புதிய பாதை ட்ரஸ்ட், கண்மலை டிரஸ்ட், தின சேவை அறக்கட்டளை மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. 



இந்தப் பயணம் க்யூரிஸ் ஷானவாஸ் மருத்துவமனையில் இருந்து இந்திய மருத்துவ கழகம் வரை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மருத்துவர்கள் சமீர் பாஷா, ஷகிலா சமீர் மருத்துவர் கோவிந்தராஜ் ஹேமமாலினி ஆகியோர் முன்னிலையில் காவல் ஆணையர் காமினி மற்றும் நடிகை வாணி போஜன் ஆகியோர் கொடியசைத்து நடை பயணத்தை துவக்கி வைத்தனர். 







இந்த நிகழ்வில் மருத்துவர் ராஜா மாரிமுத்து மற்றும் க்யூரிஸ் மருத்துவமனை குழுவினர் கலந்து கொண்டனர். பின்னர் இந்திய மருத்துவக் கழக அரங்கத்தில் கலந்தாய்வு நடைபெற்றது.

Post a Comment

0 Comments