மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகளை தானம் அளித்த குடும்பத்தினரை அவரது இல்லம் சென்று ஈகை செயலை சமூக செயற்பாட்டாளர்கள் பாராட்டினர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, கன்னிவாடியைச் சேர்ந்த சித்ரா (45), கடந்த 2026 ஜனவரி 14 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். கரூர் அப்பல்லோ மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பிறகு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு, மருத்துவக் குழுவின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் அவரது உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.இதயம், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் தானமாக வழங்கப்பட்டன. திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி காத்திருப்போர் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு பிற உறுப்புகள் வழங்கப்பட்டன.சித்ராவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்தத் தகவலை அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் பிரிவுத் தலைவரும் இணைத் துணைத் தலைவருமான ஜெயராமன் தெரிவித்தார்.
தமிழ்நாடு திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் மகள் ராதிகா, மகன் கவின் உள்ளிட்டோர் ஈகை செயலைப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர். சான்றிதழில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, பள்ளப்பட்டி பிரிவு, பாலகுமார் நகரில் வசிக்கும் செல்வராஜின் மனைவி மறைந்த திருமதி சித்ராவின் மகள் கார்த்திகா ஜெயபிரகாஷ் மற்றும் மகன் கவின் ஆகியோரின் ஈடுகட்ட முடியா ஈகைச் செயலை நாங்கள் நன்றியுடன் பாராட்டி வணங்குகிறோம், என மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் , மாநிலத் துணைத் தலைவர்
வெ.ரா. சந்திரசேகர், மாநிலத் துணைச் செயலர் இரா. இளங்கோ, தண்ணீர் அமைப்பு இணைச் செயலர் ராஜா, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டுச் சான்றிதழுடன்
ஏபிஜே அப்துல்கலாம் எழுதிய நீயே உனக்கு நிகரானவன், மஞ்சை வசந்தன் எழுதிய பெண்ணால் முடியும் நூலினையும் வழங்கி ஈகை செயலை பாராட்டி வணங்கினர்.

0 Comments