// NEWS UPDATE *** அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தம்பிதுரை மனு தாக்கல் செய்தார் *** ஆதரவற்றவர் சிகிச்சை பலனின்றி மரணம்! நல்லடக்கம் செய்த காவலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

ஆதரவற்றவர் சிகிச்சை பலனின்றி மரணம்! நல்லடக்கம் செய்த காவலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

  திருச்சி திருவெறும்பூர் அசூர் கிராமம் பொய்கைக் குடி ஊர்திப்பட்டி சாலை அருகே பெயர், விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இடது கையில் ரத்த காயத்துடன் இருந்தார். அவரது உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திருச்சி துவாக்குடி காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடம் சென்று விசாரிக்கையில்,அந்நபர் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

அந்நபர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை யாரும் உரிமை கோரவில்லை.உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர் பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் துவாக்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர் பிரேம் ஆனந்த், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.

Post a Comment

0 Comments