// NEWS UPDATE *** அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தம்பிதுரை மனு தாக்கல் செய்தார் *** பெயர் விலாசம் தெரியாத நபர் மரணம்! நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

பெயர் விலாசம் தெரியாத நபர் மரணம்! நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பிரிவு சாலை மேம்பாலம் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திருச்சி மணிகண்டம் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடம் சென்று பார்க்கையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மாநிறம் கொண்டவர். கருப்பு நிற லோயர், கருப்பு மஞ்சள் கலந்த அரக்கை சட்டை அணிந்திருந்தார். 

இறந்த நபர் உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் மணிகண்டன் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் ஸ்ரீதர் உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகாசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் மணிகண்டன் காவல்நிலைய  இரண்டாம் நிலை காவலர் ஸ்ரீதர், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.

Post a Comment

0 Comments