// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி - ஸ்ரீ வராக மகா தேசிகன் சுவாமிகள் பங்கேற்பு

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி - ஸ்ரீ வராக மகா தேசிகன் சுவாமிகள் பங்கேற்பு

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி - ஸ்ரீ வராக மகா தேசிகன் சுவாமிகள் பங்கேற்பு


ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஜோதி வரவேற்புரை ஆற்றிட ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ ஆண்டவன் சுவாமிகள் ஸ்ரீ வராக மகா தேசிகன் கலந்துகொண்டு முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். 


அதனைத் தொடர்ந்து கல்லூரியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு தொகையை வழங்கி ஆசீர்வதித்தார்..


 இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீமத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி சிவக்குமார் செய்திருந்தார்.

Post a Comment

0 Comments