BREAKING NEWS *** திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணையை தற்காலிகமாக நிறுத்திய ஆந்திர சிறப்பு விசாரணைக் குழு *** திருச்சியில் இன்னர் வீல் சங்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்

திருச்சியில் இன்னர் வீல் சங்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்

 திருச்சி இன்னர்-வீல் சங்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் நடைபெறுவது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.


திருச்சி இன்னர்-வீல் சங்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் நடைபெறுவது குறித்து  திருச்சி இன்னர்-வீல் சங்கத்தின் தலைவி டாக்டர் சாந்தி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்:-  அதில் கடந்த 1974 இல் 15 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இச் சங்கம் இன்று 90 உறுப்பினர்களாக வளர்ந்துள்ளது. நட்பும், சேவையுமே நமது தாரக மந்திரம். இதை குறிக்கோளாகக் கொண்டு, பல ஆண்டுகளாக பல்வேறு வகையான திட்டங்களை செய்து வருகிறோம்


நாங்கள் இவ்வாண்டு முழுவதும் பெண்கள் மேம்பாடு, பெண் குழந்தை கல்வி, வெகுஜன திருமணங்கள், சுகாதார விழிப்புணர்வு திட்டங்கள், பாதிக்க பட்ட மக்களுக்கு உதவுதல், பிற சமூக சேவை அமைப்புகளுடன் தொடர்புகொள்வது, தேவைப்படுபவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி தொகை நன்கொடையாக வழங்குதல் மற்றும் சமூகப் பொறுப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.


இந்த பொன்விழா ஆண்டில், செயற்கை உறுப்பு தானம், இலவச கண் அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சி, இதய நுரையீரல் புத்துயிர் (CPR) பெறுதல் ஆகிய நான்கு புதிய திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச இன்னர் வீல் தலைவி. மம்தா குப்தா, அசோசியேஷன் ஆஃப் இன்னர் வீல் இன் இந்தியா தலைவி. சுனிதா ஜெயின், மற்றும் இன்னர் வீல் மாவட்டம் 321, தலைவி டாக்டர். ஸ்வர்ணலதா அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இவ்விழா வருகிற செப்டம்பர் 19ம் தேதி அன்று மேரியட் கோர்ட் யார்ட் திருச்சியில் நடைபெறுகிறது.



 இவ்விழாவில் திருச்சி இன்னர் வீல் சங்கத்தின் நிர்வாகிகள், மற்றும் இன்னர் வீல் சங்கத்தின் உறுப்பினர்கள், மற்றுழ் ரோட்டேரியன்ஸ் உட்பட சுமார் 150 பேர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பிக்க உள்ளார்கள் என தெரிவித்தார். இந்த பேட்டியின் போது அருகில் திருச்சி இன்னர் வீல் சங்கத்தின் துணைத் தலைவி உஷா குமார், செயலாளர் வடிவு சீனிவாசன், துணைச் செயலாளர் பெரிமிளா கணகசபை, பொருளாளர் லதா மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments