NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** புதிதாக திறக்கப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை முற்றுகையிட்டு அமமுகவினர் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம்.

புதிதாக திறக்கப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை முற்றுகையிட்டு அமமுகவினர் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம்.

திருச்சி வயலூர் பிரதானசாலை எப்போதும் போக்குவரத்துநெரிசல் மிகுந்து காணப்படுவதுடன், கோவில்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் அதிமுள்ள இந்த பிரதானசாலையில் சீனிவாசநகர் பகுதியில் பொதுமக்களின் போராட்டத்தினால் ஏற்கனவே செயல்பட்டுவந்த டாஸ்மாக் மதுபானக்கடையை மூடியநிலையில் தற்போது அதேபகுதியில் புதிதாக 12 மணி நேரமும் செயல்படக்கூடிய மனமகிழ்மன்றம் மதுபானக்கடையினை திறக்க மாவட்டநிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



திருச்சி மக்களின் அடிப்படை தேவையைப் பூர்த்திசெய்யாமல் டாஸ்மாக் மதுபானக்கடையை திறப்பதிலும், மக்களை குடிக்கவைப்பதிலேயே குறியாக மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக குற்றம்சாட்டி, புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை முற்றுகையிட்டு அமமுகவினர் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.




முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்..



அதே நேரம் மக்களை பாதிக்கும் டாஸ்மாக் கடையை மூடும்வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர் ..


திருச்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் 18 இடங்களில் வரும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கையுடன் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments