திருச்சி மண்டலத்தில் தொழில் முனைவோர் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஊக்குவிக்கும் வகையில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழில்துறையினர் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தற்போது திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமையுள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகில் ரூ 11 கோடி செலவில் திருச்சி வர்த்தக மையம் தொடங்க உள்ளது. இந்த வர்த்தக மையம் அமைவதற்கு தமிழக அரசு சார்பில் ரூ 5 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டத்தில் வர்த்தக மையத்தின் சேர்மன் எம் முருகானந்தம் கூறியதாவது, திருச்சி மண்டலத்தில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் நீண்ட நாள் கனவு. இந்த திட்டத்திற்கு 2021 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி-மதுரை, திருச்சி-திண்டுக்கல் சாலை இணைக்கும் 9.42 ஏக்கர் மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து சிட்கோ நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டது. சென்னை, கோவை அடுத்தப்படியாக திருச்சியில் பிரம்மாண்டமாக இந்த வர்த்தக மையம் இருக்கும். இதற்கான பணி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும். இந்த வர்த்தக மையத்தில் 2500 பேர் அமரும் வசதியுடன் கருத்தரங்க கூடம், 250 ஸ்டாலுடன் அமைக்கப்பட உள்ளது. அலுவலகம், உணவு கூடம் மற்றும் 500 கார்கள், 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. தொழில் சார்ந்த மாநாடுகள், கண்காட்சிகள், விற்பனையாளர்கள் கூட்டம், பொருட்காட்சிகள் நடத்தப்படுவதன் மூலம் சிறு ,குறு தொழில் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவு பெறுவார்கள் என தலைவர் எம்.முருகானந்தம் கூறினார்
0 Comments