திருச்சி மாவட்டம் உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் புதிதாக வண்டு உடற்பயிற்சி நிலையம் நவம்பர் 23 ஆம் தேதி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான மாண்புமிகு கே.என்.நேரு மற்றும் பெரம்பலூர் நாடளுமன்ற உறுப்பினர் அருண் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த திறப்பு நிகழ்வை முன்னிட்டு மாநராட்சி மேயர் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய உடற்பயிற்சி நிலையம் திறப்பை முன்னிட்டு நவம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதி தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கமும் மற்றும் திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற பல்வேறு எடைபிரிவுகளில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வலுதூக்கும் வீரர்கள் கலந்துகொண்டனர்.
பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற போட்டியில் இறுதியாக அதே பகுதியை சார்ந்த வலுதூக்கும் போட்டியாளரும் மனிதநேய மக்கள்கட்சி பிரமுகருமான பாண்டமங்கலம் இப்ராஹிம் என்பவர் நான்கு எடைபிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் முதலிடத்தையும் நான்கு பதக்கங்களை தட்டி சென்றார்..பதக்கங்களை மாநில வலுதூக்கும் சங்க தலைவர் டாக்டர் வண்டு ராமசந்திரன் அவர்களும் சங்கத்தின் செயலாளர் விசுராஜன் அவர்களும் வழங்கி சிறப்பித்தனர்.இன்னும் பல்வேறு எடைபிரிவுகளில் பல்வேறு மாவட்டங்களை பலவீரர்கள் வெற்றிபெற்றனர்.
நான்கு பதக்கங்களை பெற்று முதலிடம் பெற்ற திருச்சி வலுதூக்கும் வீரரும் மனிதநேய மக்கள் கட்சி பிரமுகருமான மாவட்ட செயலாளர் A.இப்ராஹிம் கூறுகையில்... இப்போட்டிகள் நடைபெறுவது இளைஞர் மத்தியில் உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்தான விழிப்புணர்வுக்கு பயன்பெறும் என்றும் இதனை திறந்துவைத்து சிறப்பித்த நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் மற்றும் அருண்நேரு அவர்களுக்கும் வலுதூக்கும் சங்க நிர்வாகிகளுக்கும்,நிலைய உரிமையாளர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறினார்.
இப்போட்டி இப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுக்களிடையே மிகுந்த வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியாக அப்பகுதி மக்கள் கருத்து கூறினர்.
0 Comments