NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** இறகுகள் முதியோர் இல்லத்தில் 76 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

இறகுகள் முதியோர் இல்லத்தில் 76 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

திருச்சியில் உள்ள இறகுகள் அகாடமியின் நிறுவனர் மரிய  மெர்சி  அவர்களுக்கு திருச்சி பாரம்பரியமிக்க  கோபால் தாஸ் ஜுவல்லரி சார்பாக சிறந்த சமூக சேவை நிர்வாகிகான  கேடயம் மற்றும் பாராட்டு   சான்றிதழ் வழங்கப்பட்டது.  


இறகுகள் தொண்டு நிறுவன அகடமின் நிறுவனர் மரிய மெர்சி அவர்களுக்கு இறகுகள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் இறகுகள் அகாடமி மாணவர்கள்  மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.. 


அதனைத் தொடர்ந்து மரியமரசி அவர்கள்  குடியரசு தின வரலாறை மிகச் சிறப்பாகவும் துல்லியமாகவும் முதியவர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைத்தார் .


மெர்சி அவர்களுக்கு இறகுகள் முதியோர் இல்லத்தில் உள்ள  கற்பகம் 96 வயது  ரிட்டையர்டு தலைமை ஆசிரியை மற்றும் இக்பால் 86 BHEL நிறுவனத்தின் முன்னாள்  மேலாளர் அவர்களிடம் தனது விருதை பெற்றுக் கொண்டார்

Post a Comment

0 Comments