NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ம.ஜ.க ஆதரவு – ம.ஜ.க தலைவர் தமிமூன் அன்சாரி பேட்டி!

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ம.ஜ.க ஆதரவு – ம.ஜ.க தலைவர் தமிமூன் அன்சாரி பேட்டி!

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ம.ஜ.க ஆதரவளிக்கிறது, மோசமான தோல்வி பயத்தால் தான் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளார் - திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி பேட்டி அளித்தார்..மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமூன் அன்சாரி திருச்சியில் இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்...


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு முழுமையான ஆதரவு அளிக்கிறோம். அவரை வெற்றி பெற செய்ய களப்பணியாற்ற உள்ளோம். எங்களின் இணை  செயலாளர் சையது முகம்மது பாரூக் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைத்துள்ளோம்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி என்பது திராவிட மாடல் அரசு கடந்த நான்காண்டுகள் செய்த சாதனைகளுக்கு மற்றொரு அங்கீகாரமாக இருக்கும்.


நாடு முழுவதும் இந்தியா கூட்டணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது என்பதை காட்டுவதற்கு ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றியின் வாயிலாக நிரூபிக்க வேண்டி உள்ளது. நாட்டின் நலனிலும் இந்த வெற்றி அமைந்துள்ளது என்கிற காரணத்தால்  உறுதியாக எங்களுடைய களப்பணி அங்கு இருக்கும்.யுஜிசியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மூலம் கல்வியின் தரத்தை சீர்குழைப்பதற்கான முயற்சி என நாங்கள் கருதுகிறோம். கல்வியின் தரம் குறையாத வகையில் ஏற்கனவே இருந்த நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.



தேர்தல் சரியாக நடக்காது என எடப்பாடி பழனிச்சாமி கூறுவதன் மூலம் அவர் தேர்தல் ஆணையத்தை அவமதித்துள்ளார். ஒரு அரசியல் கட்சி குறிப்பாக எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி களத்தில் நின்று மக்களின் உணர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். வெற்றி தோல்வி என்பது இரண்டாவது. ஜனநாயகத்தில் சமநிலை இருக்க வேண்டும் என்றால் ஒரு எதிர்க்கட்சி களத்தில் நிற்க வேண்டும். அவர்கள் பின்வாங்கி இருப்பதன் மூலமாக மோசமான தோல்வியை ஒப்பு கொண்டு உள்ளார்கள், தோல்வி பயத்தின் காரணமாகத்தான் அவர்கள் பின்வாங்கியுள்ளார்கள்.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு எங்களுக்கான தொகுதி ஒதுக்க வேண்டும் என திமுக தலைவரிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்தோம் அவரும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தொகுதி பெறக்கூடிய அளவிற்கு எங்கள் கட்சி வளரவில்லை. தற்பொழுது தான் நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நிச்சயமாக சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கான வாய்ப்புகள் உண்டு.


மாதாந்திர மின்கட்டணத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும். அதுதான் மக்களின் முழுமையான விருப்பம். அதை நிறைவேற்ற வேண்டியது தான் திராவிட மாடல் அரசின் கடமையாக இருக்க வேண்டும். ஸ்மாட் மீட்டர் வைத்த பின்பு தான் மாதாந்திர மின்கட்டணம் எனக் கூறுகிறார்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக கால தாமதப்படுத்தக் கூடாது.

தமிழ் தேசியம் என்பது தமிழ் பாசிசமாக மாறிவிடக்கூடாது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரைப் புகழ்ந்து பேசி தான் தமிழ்நாட்டு மேடைகளில் வலம் வந்தார். அதன் காரணமாகத்தான் அவர் மிகப்பெரிய உச்சத்தை எட்டினார். பெரியாரின் கைத்தடி தான் இலங்கையில் பிரபாகரனை துப்பாக்கியாக மாறியது என்கிற வசனத்தை எல்லாம் சீமான் பேசியுள்ளார். பெரியார் மீது விமர்சனம் வைப்பது தவறில்லை. ஆனால் பெரியார் கூறாத ஒன்றை அவர் கூறியதாக பேசுவது அபாண்டம், அதை சீமான் செய்தது கண்டிக்கத்தக்கது. யாரையோ திருப்தி படுத்துவதற்காக அவர் அவ்வாறு பேசி உள்ளார்.

பெரியாரின் புத்தகங்களை அரசுடைமை ஆக்கினால் தான் நாங்கள் ஆதாரத்தை காட்டுவோம் என கூறுவது தப்பித்து போகக்கூடிய முயற்சி. 

திராவிடர் கழகமும் பெரியாரின் குடும்பமும் பெரியாரின் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தால் அரசு அதை பரிசீலிக்கும்.

தி.கவிலிருந்து திமுக பிரிந்து வந்த பிறகு அந்த நேரத்தில் முஸ்லிம்கள் திமுகவிற்கு முழுமையான ஆதரவு அளித்தார்கள். அந்த நேரத்தில் முஸ்லிம்களை விமர்சித்து பெரியார் பேசிய பேச்சை வைத்து மட்டும் வைத்துக் கொண்டு அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியுள்ளார் என கூறுவது தவறு. பல நேரங்களில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான பல்வேறு கருத்துக்களை பெரியார் கூறியுள்ளார். இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என கூறியவர் தான் பெரியார். பெரியார் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் பாசிசவாதிகளுக்கு எதிராகவும் தான் இருந்தார். 


சீமானுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என அவர் பேசுகிறார். அவருக்கு முஸ்லிம்கள் மட்டுமல்ல அவர் சார்ந்த சமூகத்தினர் கூட வாக்களிக்கவில்லை. அதற்கு காரணம் அவருடைய அரசியல் நடவடிக்கைகள் தான்.


இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தை பொருத்தவரை அந்த மாநிலத்தின் சூழலுக்கு ஏற்ப முஸ்லிம்கள் தங்களுக்கு யார் பாதுகாப்பான அரசியல் முகம் என்பதை அறிந்து வாக்களிக்கிறார்கள். இது முஸ்லிம்களின் நுண்ணறிவு அரசியலை காட்டுகிறது. பாஜக ஆட்சி வந்த பின்பு இந்தியாவில் முஸ்லிம் சமுதாயம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. 


கைதட்டலுக்காக சீமான் பேசும் பேச்சுக்கள் இஸ்லாமியர்களை கோபப்பட வைக்கிறது.


திமுகவை நாங்கள் நம்புகிறோம் திமுக சிறுபான்மை மக்களை நம்புகிறது. 


தமிழகத்தில் பெரியாரை நிராகரித்துவிட்டு யாராலும் அரசியல் செய்ய முடியாது. தேசிய அளவில் காந்தியடிகளை மக்களின் மனங்களில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார்கள். அதே போல தமிழகத்தில் பெரியாரை மக்களின் மனங்களில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார்கல். அது ஒரு போதும் நடக்காது.


அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை மட்டும் வைத்து தமிழக முழுவதும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடக்கிறது என கூறுவது நியாயம் அல்ல. அந்த பிரச்சனைக்கு தீர்வு காணாமல் அதை அரசியல் ஆக்கக்கூடாது.

பெண்கள் பாதுகாப்பிற்காக திமுக் அரசு கடுமையான சட்டங்களை நிறைவேற்றி இருப்பது நாங்கள் வரவேற்கிறோம் இன்னும் அதை கடுமையாக்கினாலும் அதையும் நாங்கள் வரவேற்போம்.

நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறி திமுக ஆட்சி அமைத்தது ஆனால் மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்த்தார்கள் ஆனால் அது நடக்கவில்லை அதே நேரத்தில் தற்பொழுது தமிழகத்தில் மட்டும் இருந்த நீட் விலக்கு கோரிக்கை இன்று பல்வேறு மாநிலங்களில் எதிரொலிக்கிறது. நாடு முழுவதும் இந்த கோரிக்கை எழுந்துள்ள நிலையில் நீட் விலக்கிற்கு சாத்தியம் கூறு ஏற்படலாம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தான் நாங்கள் வலியுறுத்துகிறோம் அது உடனடியாக சாத்தியமில்லை என்றால் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறோம். அதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். 

 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு தான் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கலாச்சாரம் பெருகி உள்ளது

 இதற்கு பின்பு மாபெரும் சதி உள்ளது. பஞ்சாபில் அந்த மக்களின் எழுச்சி உருவான பிறகு அதை ஒடுக்குவதற்கு கஞ்சா அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் அந்த மாநிலத்தில் அதிகம் பரவியது. அதனால் அந்த மாநில இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் இது உண்மை. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு தமிழக இளைஞர்களின் மதி மயக்க செய்யத்தான் கஞ்சா பழக்கம் அதிகமாகி இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த வசிமா என்கிற பெண் ரோல் பால் போட்டியில் இந்திய சார்பில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments