திருச்சியில் விமான நிலையத்தில் தொழுகைக் கூடம் திறப்பு மஜக நிர்வாகிகள் நேரில் சென்று துரை வைகோ எம்பியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் உருவாகியுள்ளது.
இந்த விமான நிலையத்தில் தினசரி அதிகமான முஸ்லிம் பயணிகள் வருகை தருகின்றனர்.
அவர்களுக்கான பிரத்யேக தொழுகை கூடம் (Prayer Hall) வேண்டும் என்பது நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்து வந்தது.அதன் அடிப்படையில் சமீபத்தில் ஒரு தொழுகை கூடத்தை முறைப்படி அதிகாரப்பூர்வமாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ M.P. அவர்கள் திறந்து வைத்தார்கள் .
இந்தியாவின் பெரும்பாலான விமான நிலையங்களில் தொழுகை கூடம் இருப்பது குறிப்பிடத்தக்கது .திருச்சி விமான நிலையத்துக்கு வெளியே கோயில் கலைச் சிற்பத்துடன் கட்டப்பட்டிருக்கிறது.உள்ளே தொழுகை கூடம் திறக்கப்பட்டிருக்கிறது.இது திருச்சி மக்களின் ஒற்றுமையான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இருப்பதாக பலரும் பாராட்டு கூறியுள்ளனர்.
இதற்காக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களை தொடர்பு கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.சமீபத்தில் அவரை சந்தித்தபோது மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் திருச்சி விமான நிலைய பயன்பாடுகள், செயல்பாடுகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை நேரில் அவரிடம் கவனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
விரைவில் ஓடுபாதை விரிவாக்கத்தையும் செய்யுமாறு அப்போது அவர் கேட்டுக் கொண்டார் .அப்படி ஓடுபாதை விரிவுபடுத்தப்பட்டால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ,மலேசியன் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ் , எத்திஹாத்,GULF ஏர் , லுப்டான்சா போன்ற உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களும் விமானங்களை திருச்சிக்கு இயக்கும் வாய்ப்பு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது..இன்று எம்பி துரை வைகோ அவர்களை திருச்சி மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பாபு அவர்களின் தலைமையில் மஜகவினர் நேரில் சென்று, தங்களுடைய பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.அவர்களுடன் இளைஞர் அணி மாநில செயலாளர் திருச்சி ஷரிப் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்
0 Comments