NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இளைஞர் அணி மாவட்ட தலைவர் அஜீம் தலைமையில் திருச்சி பாலக்கரையில் நடைபெற்றது. இளைஞர் அணி மாநில செயலாளர் பஷீர் அலி மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் சாதிக்குல் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மைதீன் அப்துல் காதர் இந்த  ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கம் குறித்தும் இளைஞர் அணியின் அடுத்த ஒரு மாதத்திற்கான செயல் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் முபசீர், முகமது சமீர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 


இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிதாக கட்சியில் இணைந்தவர்களையும் அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கும் பொறுப்புகளை பகிர்ந்து அளிப்பது என முடிவு செய்து இளைஞர் அணி மாவட்ட நிர்வாகத்தை விரிவுபடுத்தி அதை ஒப்புதல் அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது


இளைஞர் அணி நிர்வாகத்தை வலுப்படுத்தும் விதமாக மாநகர் மற்றும் புறநகர்களில் இளைஞர் அணி நிர்வாகிகள் சுற்றுப்பயணம் செய்து புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்து கிளைகளை வலுப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 


மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 11.1.2025 சனிக்கிழமை அன்று லால்பேட்டையில் நடைபெறக்கூடிய மாவட்ட மாநாட்டிற்கு இளைஞர் அணி சார்பில் திரளான மக்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வருகிற 6/01/2025 அன்று இளைஞர் அணி சார்பில் தர்கா பகுதியில் தெருமுனை கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் உமர் முக்தார்,சதக்கத்துல்லா, சையது முகமது,முகமது பாசில்,முகமது சமீர், ஹாரிஸ்கான்,அலாவுதீன், யாசிர் அஹமத், முகம்மது சபி, நிஜாம், ராஜா, சாதிக் பாஷா,ஜாபர் ஷெரீப், நவாப் கான், ராஜா முஹம்மது,ஷேக் உசைன்,முகமது நஸ்ருதீன்,பிலால், ஷபிக், ஷேக் முகமது, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments