NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தினர் தமிழக அரசிடம் கோரிக்கை

நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தினர் தமிழக அரசிடம் கோரிக்கை

 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் 2022/24 ஆண்டுக்கான சங்கத்தின் பொதுக்குழு மற்றும் 2025 ஆண்டு அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.. 


மேலும் புதிய உறுப்பினர்களுக்கு சங்கத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டது



மேடை மெல்லிசை கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து வாடுகிறார்கள். சில சமயங்களில் விழாக்களில் வாய்ப்புகள் கிடைக்காமல் அன்றாட தினத்தை கடப்பதற்கு மிக சிரமப்பட்டு வருகிறார்கள். 

ஆகையால் எங்கள்  சங்கத்தின் முக்கிய கோரிக்கையாக தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தினர்.

Post a Comment

0 Comments