NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி இரயில் நிலையத்தில் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் இரயில்வே பாதுகாப்புபடை போலீசார் சோதனை

குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி இரயில் நிலையத்தில் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் இரயில்வே பாதுகாப்புபடை போலீசார் சோதனை

இந்திய திருநாட்டின் 76 வது குடியரசுதினம் நாளைமறுதினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் நாட்டின் முக்கிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதன் ஒருபகுதியாக திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புபடை ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையில், மோப்பநாய் உதவியுடன்  இரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

திருச்சி ஜங்சன் ரெயில்நிலையத்தில் இருந்து ஹவுரா செல்லும், ஹவுரா ரெயிலில் பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகளின் ரெயில்பெட்டிகளில் சென்று மோப்பநாய் டான் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவி ஆகியவற்றை கொண்டு சோதனை செய்தனர். 

அதேபோல திருச்சி ஜங்சன் ரயில்நிலையத்தில் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறை, பார்சல் கொண்டுசெல்லும் இடங்கள் மற்றும் தண்டவாளங்கள் ஆகியவற்றில் சோதனை செய்தனர். 

தொடர்ந்து திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் உள்பட பலஇடங்களில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments