மத்திய அரசின் 2025 - 26 காண நிதிநிலை அறிக்கை தொடர்பாக தேசிய மின் நூலகம் மற்றும் ஆவணப்படுத்துதல் துறை பேராசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர புரட்சி கவிதாசன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது ஆசிர்வாதம் ஆச்சாரி கூறுகையில்..,தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் இன்று பதிவிட்ட வீடியோவில், மத்திய அரசு மாநில அரசுக்கு ஏதும் செய்யாவில்லை எனவும், கல்வி துறைக்கு ஏதும் செய்யவில்லை. மேலும் தன்னை அப்பா என கூப்பிட்டால் பெருமையாக இருக்கும் என கூறி வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.இதில் அவர் பொய்யான குற்றச்சாட்டை கூறி உள்ளார். 13 வது முறையாக நிர்மலா சீதாராமன் 50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 15 லட்சம் தான் பட்ஜெட் போடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியை விட மூன்று மடங்கு கூடுதலான பட்ஜெட் போடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு 207 சதவிகிதம் கூடுதலாக நிதி வழங்கி உள்ளது.1.73 ஆயிரம் கோடி ரூபாய், வரியின் மூலமாக கொடுக்கப்பட்டது. 38 ஆயிரம் கோடி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது. திமுக ஆட்சியில் 4 வருடங்களுக்கு 6,200 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது இதில், மாணவர்கள் கல்வி 5280 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.ஊட்டச்சத்து உணவு, காலை உணவு திட்டத்திற்கு என 2,200 கோடி ரூபாய் மத்திய அரசு பணம் கொடுத்து உள்ளது.
தமிழகத்திற்கு சுகாதார மேம்பாட்டிற்கு 5,200 கோடி வழங்கப்பட்டுள்ளது.வீட்டுக்கு வீடு தண்ணீர் வழங்கவும் ஜல் ஜீவன் திட்டத்திற்கு 6,000 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு 2000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மெட்ரோ திட்டத்திற்கு 41,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.1,31,000 கோடி ரூபாய் மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 11 லட்சத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த 10 ஆண்டுகளில் கொடுக்கப்பட்டு உள்ளது. 3.80 லட்சம் கோடி திமுக ஆட்சியில் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழக்கத்தை விட கூடுதலாக நிதியை கொடுத்து வருகிறோம் பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் 1050 கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு செல்லும்போது ஆனா ஆவன்னா கூட தெரியாத அவல நிலையில் இருக்கின்றனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எங்கு கொடுக்கவில்லை நிதி என தெளிவுபடுத்துக் கூற வேண்டும் அவருக்கு நேருக்கு நேர் சவால் விடுகிறேன். திருச்சி 70% விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டமாக உள்ளது.விவசாயத்திற்கு என நீரில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
2ஜி வழக்கில் முக்கிய சாட்சியாக நான் இருந்து வருகிறேன் சிபிஐ மேல்முறையோடு செய்து நேற்று 120 பக்க ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்ற நீதிபதி மகாஜன் விசாரணை நடத்தி வருகிறார் மார்ச் 18 ஆம் தேதி முதல் தினமும் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் இந்த வழக்கு முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.
அதனை தொடர்ந்து பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் கூறும் போது..
தமிழக பட்ஜெட்டை திருக்குறளை வாசித்து துவங்கிய நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் பட்ஜெட் வாசிப்புக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் மரியாதை ஆவது கொடுக்க வேண்டும் அதனை திமுகவினர் கொடுக்கவில்லை.
பாஜக அரசுக்கு 4 கோடி ரூபாய் வரி கொடுத்தது நான் போட்ட பிச்சை என ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேசியுள்ளார் நான்கு தலைமுறை பணக்காரராக நான் இருந்தே என பொது மேடையில் கூறியுள்ளார் இவர் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன இதுகுறித்து காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக முதல்வர் மத்திய அரசிடம் தொடர்ந்து நிதியை கேட்டு வருகிறார் அதனை பிச்சை என்று எடுத்துக் கொள்ள முடியுமா?. எம் எல் ஏ பழனியாண்டி அவர் பேசியது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விஸ்வகர்மா திட்டத்தில் யார் வேண்டுமானாலும் பயன்பெறலாம் ஆனால் தமிழக அரசு அதனை கிடப்பில் போட்டு உள்ளனர். மூன்று மொழிக் கொள்கை மூலமாக மக்களை குழப்புகின்றனர் இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதலே மூன்று மொழிக் கொள்கை இருந்து வருகிறது. என கூறினார்.
0 Comments