// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி அருகே 2 புதிய டிரான்ஸ்பார்மர்… மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் நன்றி

திருச்சி அருகே 2 புதிய டிரான்ஸ்பார்மர்… மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் நன்றி

குறைந்த மின்னழுத்த மின்சார வினியோகத்தை சீர் செய்ய 2 புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்த மின்சார வாரிய ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றிய மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்




திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய்நகர் பிரிவு சாலை மற்றும் கீரமங்கலம் ,கிருஷ்ணா நகர்கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் வந்ததால் அடிக்கடி வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் பழுதடைந்து கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூடுதல் மின்மாற்றி அமைத்து குறைந்த மின்னழுத்தத்தை சீர் செய்ய வேண்டுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 


இந்த நிலையில் பிச்சாண்டார்கோவில் மின்சார வாரியத்தின் இயக்குதலும் காத்தலும் உதவி செயற்பொறியாளர் துரைராஜ் மேற்பார்வையில் மின்சார வாரிய ஊழியர்கள் கீரமங்கலம், கிருஷ்ணா நகர் சாய்நகர் பிரிவு சாலை ஆகிய இடங்களில் 110 கிலோவாட் கொண்ட இரண்டு புதிய மின்மாற்றி பெட்டி அமைத்தனர். 







இதனையடுத்து கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்  மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் நன்றி தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments